வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 97 பேரை நியமனம் செய்வதற்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு 14 ,15, 16 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேலைகளிலும் தமிழ்நாடு முழுவதும் 57 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 24 ஆயிரத்து 420 ஆண்களும், 40 ஆயிரத்து 266 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 64 ஆயிரத்து 710 நபர்கள் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர்.
இவர்களுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு எழுத வந்தவர்கள் சோதனை செய்த பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் பல்வேறு நடைமுறைகள் கொண்டு வந்ததால் எவ்வித குழப்பமுமின்றி தேர்வு நடத்தப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் தெரிவித்தார்.
மேலும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 18 ஆயிரத்து 788 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் 12 ஆயிரத்து 437 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதேபோல் 15ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 23 ஆயிரத்து 739 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் 15 ஆயிரத்து 316 தேர்வர்கள் ஆன்லைன் மூலம் தேர்வினை எழுதியுள்ளனர்.