தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு உரிமம் பெற 21 நிபந்தனைகள் - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு! - பெருநகர சென்னை மாநகராட்சி

ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு உரிமம் பெற 21 நிபந்தனைகளுடன் கூடிய விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு உரிமம் பெற 21 நிபந்தனைகள் - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!
ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு உரிமம் பெற 21 நிபந்தனைகள் - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

By

Published : May 30, 2022, 6:57 PM IST

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முறையான அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் ஆகியவை தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. அதேநேரம், விதிகளை மீறும் அழகு நிலையங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில், தொழில் உரிமம் பெறுவதற்கு ஒற்றைச் சாளர முறையில், சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பார்கள். குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முக்கியமாக,

  • கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக்கூடாது.
  • மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக்கூடாது.
  • வாடிக்கையாளர்களுக்கு எனத் தனி வருகைப்பதிவேடு இருக்க வேண்டும்.
  • எந்த வகையிலும் பாலியல் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
  • ஏதேனும் புகார்கள் இருப்பின் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவார்கள்.
  • சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
  • கரோனா உள்ளிட்ட தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக்கூடாது.
  • ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர், பணியாளர்கள் தங்களது கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவையை வழங்க வேண்டும்.
  • ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன், கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • பக்க விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
  • உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.

உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கி விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - ஈபிஎஸ் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details