தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா; ஒரே நாளில் 20 பேர் பாதிப்பு.. - தமிழகம்

Today TN Corona Update: தமிழகத்தில் இன்று (ஜன.07) 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

20-people-have-been-infected-corona-in-tamil-nadu-at-jan-2024
தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா; ஒரே நாளில் 20 பேர் பாதிப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 8:56 PM IST

சென்னை: தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த ஜெ.என் 1 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு, தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பின் போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால், கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜன.7) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் கரோனா புதியதாக 626 பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, தமிழகத்தில் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 8 ஆயிரத்து‌ 336 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண், பெண் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் என மொத்தமாக 36 லட்சத்து 11 ஆயிரத்து‌ 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் 10 பேர், கோவையில் 5 பேர், திருச்சியில் 2 பேர், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் தலா ஒருவர் என 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26 பேர் இன்று (ஜன.07) டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details