தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புழல் சிறையில் ஒரே இரவில் தற்கொலைக்கு முயன்ற இரண்டு கைதிகள்- ஒருவர் பலி! - புழல் சிறையில் அதிகரிக்கும் தற்கொலை

சென்னை: புழல் சிறையில் நள்ளிரவில் இரண்டு கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.

stanley hospital

By

Published : Apr 3, 2019, 6:58 PM IST

திண்டிவனத்தைச் சேர்ந்த அருள்குமார் என்பவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்துக்காக நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று புழல் சிறையில் அருள் குமாருக்கு உணவு உண்பதற்காகக் கொடுக்கப்பட்ட அலுமினியம் தட்டினை கூர்மையாக மாற்றி தன் கழுத்து, கையினை அறுத்துக் கொண்டார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சிறை காவலர்கள் அருள் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதேபோல், புழல் சிறையில் கைதியாக இருந்துவந்த மதியழகன் என்பவருக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்டான்லி மருத்துவமனை

இதனை அறிந்த சிறை காவலர்கள் மதியழகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மதியழகன் மரணமடைந்தார்.

இதுபோன்று, புழல் சிறையில் தொடர்ந்து கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் நடந்த ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறை கைதியான ராம்குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். மேலும், கடந்த வருடம் சிறை கைதி பாக்ஸர் முரளியை எதிர் கோஷ்டியினர் அலுமினிய தட்டினை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details