தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - பொறியியல் கல்லூரி

பொறியியல் படிப்பில் சேர நடப்பாண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
பொறியியல் படிப்பில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

By

Published : Jul 24, 2022, 6:50 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாள்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 ந் தேதி வெளியானது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது முதல் 3 ஆயிரத்து 300க்கு மேற்பட்டோர் தினசரி விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் 23ஆம் தேதி மட்டும் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. 23ஆம் தேதி மாலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சத்து 97ஆயிரத்து 463 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் குறிப்பாக வரும் 27ஆம் தேதிக்குள் இது 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குரூப் 4: ஒரு பணியிடத்திற்கு போட்டித் தேர்வு எழுதிய சுமார் 255 பேர்

ABOUT THE AUTHOR

...view details