கடந்த மே மாதம் 25ஆம் தேதியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் 65,654 பயணிகளுக்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் மொத்தம் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை ஐந்து) சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 19 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா - chennai corona cases
சென்னை : வெளிநாட்டு விமானங்களில் வந்த 16 பேர், உள்நாட்டு விமானங்களில் வந்த மூன்று பேர் என மொத்தம் 19 பேருக்கு நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில், 16 பேர் வெளி நாட்டு விமானங்களில் இருந்து வந்தவர்கள். மூன்று பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள். மீட்பு விமானங்கள் மூலம் வெளி நாடடுகளில் இருந்து கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து நேற்று வரை வந்த 11 ஆயிரத்து 888 பயணிகளுக்கு சோதனை நடத்தியதில், இதுவரை 148 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இதுவரை 294 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் தளர்வுகள் - பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்