திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், ககுவூ வாடிஸ், ஆய்டா, லிசன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட், தி விண்ட், ரன்னிங் டூ தி ஸ்கை ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.