தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'188 புதிய மருத்துவர்கள் நாளை பணியமர்த்தப்படுவர்' - மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர்

சென்னை: தமிழ்நாட்டில் போராட்டத்தைத் தீவிரமாக வழிநடத்திச்செல்லும் மருத்துவர்களுக்கு மாற்றாக 188 புதிய மருத்துவர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

188-new-doctors-appointed-by-ministry-of-people-welfare

By

Published : Oct 31, 2019, 7:32 PM IST

அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறது. ஆனால் மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இன்று மதியம் 2 மணிக்குள் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து சில மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், நாளை காலைக்குள் மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே மருத்துவர்கள் போராட்டத்தைத் தீவிரமாக வழிநடத்திச் செல்லும் மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 188 மருத்துவர்கள் நாளை பணியமர்த்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்பாரா? - ஓஎஸ்.மணியன்!

ABOUT THE AUTHOR

...view details