சென்னை:தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் திமுக நிர்வாகியின் மகளுடன், 18 வயது சிறுவன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகியுள்ளார். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நண்பனைப் போல பழகிய சிறுவன், நாளடைவில் ஆபாசமான குறுஞ்செய்திகளையும் அனுப்பத் தொடங்கியுள்ளான். இது தொடர்பாக சிறுமி பலமுறை கண்டித்தும் தொடர்ந்து, சிறுவன் அதே போன்ற குறுஞ்செய்திகளையே அனுப்பியிருக்கிறார்.