சென்னை மகாகவி பாராதி நகரில் வசித்துவரும் 17 வயது சிறுமி ஒருவரை, புழல் சிறையில் பணிபுரியும் மகேஷ் என்பவர் காதலித்து ஏமாற்றியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அச்சிறுமி, நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்று தீக்குளித்தார். பின்னர், அவர் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புழல் சிறை காவலர் மகேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக அச்சிறுமி வீடியோ வாக்குமூலம் அளித்திருந்தார்.