தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது - இன்ஸ்டா வால் அரங்கேறிய விபரீதம்

சென்னை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி இரண்டு மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

By

Published : Jan 11, 2022, 4:45 PM IST

சென்னை:அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த தகவலை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் மருத்துவமனைக்குச் சென்ற காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமிக்கு ஆறு மாதத்திற்கு முன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சிறுமியை பைக்கில் அழைத்து கொண்டு வெளியில் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று (ஜன.11) கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த இளைஞரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கணினி விற்பனையாளர் வீட்டில் 11 பவுன் நகைக் கொள்ளை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

ABOUT THE AUTHOR

...view details