தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சையால் 148 பேர் உயிரிழப்பு - கருப்பு புஞ்சையால் 148 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 148 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளதாக கருப்பு புஞ்சை நோய்க் கண்காணிப்பு மருத்துவ குழு தலைவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

chennai
சென்னை

By

Published : Jun 25, 2021, 1:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட 13 நபர்கள் அடங்கிய குழுவினர், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்பித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் மோகன் காமேஸ்வரன், "தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்த நோயால் இதுவரை 148 பேர் இறந்துள்ளனர். 2700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் 6 விழுக்காடாக உள்ளது.

தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறைந்ததற்கு காரணம் மருத்துவர்கள் குழுவினர் துரிதமாக செயல்பட்டு வருவது தான். அதேபோல் அதற்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் உள்ளது.கறுப்பு பூஞ்சை நோய் உரு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி அடுத்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details