சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏா் இந்தியா விமானம் துபாய் புறப்படத் தயாரானது. அதில், பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சேர்ந்த சையத் அலி (26) என்பவா் தொழில் வேலையாக மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்திருந்தார். ஆனால், அவரின் செயல்பாட்டால் சந்தேகம் அடைந்த சுங்கத் துறையினர், உடைமைகளைச் சோதனை செய்தனர்.