தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 18 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் மாநில முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் 132 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
சென்னை: தியாகராய நகரில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 132 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோதணையில் ஈடுபடும் பறக்கும் படையினர்
அதன்படி, சென்னை தியாகராய நகரில் சோதனைமேற்கொண்ட அதிகாரிகள், உரிய ஆவணங்களின்றி இரண்டு கார்களில் கொண்டு செல்லப்பட்ட நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து திநகரில் உள்ள நகைக்கடைக்கு நகைகள்கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்க நகைகளின் மதிப்பு 39 கோடியே 60 லட்சம் ஆகும்.