சென்னை கே.கே.நகர் சத்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் சாய் பிரசன்னா(17). இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை! - +2 exam
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
சென்னை
அதில் சாய் பிரசன்னா மூன்று பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாய் பிரசன்னா, நேற்று இரவு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.