சென்னை:2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஜூலை 19 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கரோனா தொற்றின் காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாததால் தேர்விற்கு பதிவு செய்திருந்த மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 7,400 பள்ளிகளிலிருந்து தேர்வு எழுத விண்ணப்பித்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 12ஆம் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 22ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 22) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கையொப்பமிட்டு, மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!