சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அக்டோபர் 14 ஆம் தேதிக்கான கரோனா புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதியதாக ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 944 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,259 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 4 கோடியே 81 லட்சத்து ஒரு ஆயிரத்து 791 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 26 லட்சத்து 83 ஆயிரத்து 396 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 32 ஆயிரத்து 92 என அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 12 நோயாளிகளும் என 20 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,52,284
- கோயம்புத்தூர் - 2,44,559
- செங்கல்பட்டு - 1,70,215
- திருவள்ளூர் - 1,18,613
- ஈரோடு - 1,03,037
- சேலம் - 98,882
- திருப்பூர் -94,144
- திருச்சி - 76,770
- மதுரை - 74,924
- காஞ்சிபுரம் -74,419
- தஞ்சாவூர் -74,485
- கடலூர் - 63,752
- கன்னியாகுமரி - 62,090
- தூத்துக்குடி- 56,083
- திருவண்ணாமலை - 54,644
- நாமக்கல் - 51,407
- வேலூர் - 49,616
- திருநெல்வேலி - 49,147
- விருதுநகர் - 46,198
- விழுப்புரம் - 45,663
- தேனி - 43,522
- ராணிப்பேட்டை - 43,252
- கிருஷ்ணகிரி - 43,253
- திருவாரூர் - 41,023
- திண்டுக்கல் - 32,953
- நீலகிரி - 33,230
- கள்ளக்குறிச்சி - 31,170
- புதுக்கோட்டை - 29,986
- திருப்பத்தூர் - 29,167
- தென்காசி - 27,310
- தர்மபுரி - 28,092
- கரூர் - 23,800
- மயிலாடுதுறை - 23,116
- ராமநாதபுரம் - 20,477
- நாகப்பட்டினம் - 20,791
- சிவகங்கை - 20,005
- அரியலூர் - 16,770
- பெரம்பலூர் - 12,009
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,027
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவு - நலமுடன் இருப்பதாகத் தகவல்!