கடந்த ஞாயிறு (அக்டோபர் 10) அன்று தமிழ்நாட்டின் பட இடங்களில் ஐந்தாம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார்.
இதையடுத்து நேற்று (அக்டோபர் 11) காலை திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய மா. சுப்பிரமணியன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்கள், நாளை (அக்டோபர் 12) நடைபெறும்' எனத் தெரிவித்தார். மேலும் இம்முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் கூறினார். இதனிடையே இந்தியாவில் 2 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில் விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்