இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுகள் வரும் மார்ச் 24ஆம் தேதியன்று முடிவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளுக்கான விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டுசெல்லும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் வரும் 26ஆம் தேதி முதல் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
அவற்றைத் திருத்தும் பணிகள் மண்டல அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. விடைத்தாள்களைத் திருத்திய பின்னர், மதிப்பெண்களை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே, மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.யை தேர்வுத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.