சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”11ஆம் வகுப்பு மார்ச் 2021 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசியர் மூலம் வரும் 30-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட, தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டு இருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்” என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தவகையில் பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது திறப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதையும் படிங்க:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி