இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், '' 2017-18ஆம் கல்வியாண்டிற்கு முன்பு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) 11ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், தற்போது பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இதுபோன்று படித்துவரும் 12ஆம் வகுப்பு மாணவர்களை, மீண்டும் 11ஆம் வகுப்பு தேர்வு எழுத அறிவுறுத்தாமல், அவர்களின் நலன் கருதியும் மன அழுத்தத்தினைக் குறைக்கும் வகையிலும் 12ஆம் வகுப்பு தேர்வினை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
அதனடிப்படையில், சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தற்போது பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எழுதலாம்.