சென்னை விருக்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் தியாகு பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து, மாணவர் உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நால்வரில் ஒருவர் ரவுடி புறா மணியின் சகோதரர் சுமன் என்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக, வேறு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு அங்கு வந்ததாகவும், அவர் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்து மாணவனை தாக்கி விட்டு சென்றதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.