பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மொழிப்பாடம் ஆங்கிலம் ஒரே தாளாக ஒருங்கிணைத்து தேர்வு நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர் 11 , 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் மொழிப்பாடம், ஆங்கில பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை, 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வு எழுத அனுமயளித்து ஆணையிடப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை வளாகம் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம், ஆங்கில பாடத்திற்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால் சுமார் 20 லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு தேர்வு மையத்தில் ஓராண்டு பயன்படுத்தப்படும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும்.
அரசு தேர்வுத்துறை இயக்குனரின் கருத்தினை ஏற்றும், ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல், கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் ,தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழி பாடம்,ஆங்கிலம் பாடத் தேர்வில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020ஆம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடத்துவதப்படும்.
அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறு முதல், இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாரம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
இதனால் மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய பின்னர் அதனை 500 மதிப்பெண்களுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை மாறும், ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு அதிக அளவில் இலக்கணம் கற்பிக்கும் சூழ்நிலை வெகுவாக குறையும் என்பதால் அவர்களின் மொழிப்புலமை குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.