தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்... - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம்

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 2019 தேர்வு முடிவுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 2020 தேர்வு முடிவுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

குறைந்த  10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்...
குறைந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்...

By

Published : Jun 20, 2022, 12:27 PM IST

சென்னை:கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக வகுப்பு வழக்கமான முறையில் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பல சிரமங்களுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனிடையே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஜூன்.20) கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை அறிவித்தார். அதன் படி, 12 ஆம் வகுப்பில் 93.76% மற்றும் 10 ஆம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்புதேர்ச்சி விகிதம்

  • 10 ஆம் வகுப்பில் 90.07% தேர்சி (8,21,994) பேர் தேர்ச்சி பெற்றவர்கள்
  • மாணவர்கள் - 3,94,920 பேர் தேர்ச்சி
  • மாணவிகள் - 4,27,073 பேர் தேர்ச்சி
  • மாணவர்களை காட்டிலும் மாணவியர் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • கடந்த 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 5% சதவீதம் குறைவு
  • 2019 ஆம் ஆண்டு 95.2 சதவிகிதம் தேர்ச்சி
  • 2022 ஆம் ஆண்டு 90.07 சதவிகிதம் தேர்ச்சி
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகள் 85.25 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி
  • தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.31 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்தில் 45 மாணவர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே ஒரு மாணவர் தமிழில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கணித பாடத்தில் 2,186 மாணவர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • அறிவியல் பாடத்தில் 3,841 மாணவர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • சமூக அறிவியல் பாடத்தில் 1,009 மாணவர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்புதேர்ச்சி விகிதம்

  • 12 ஆம் வகுப்பு தேர்சி விகிதம் 2020 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயர்வு
  • 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277
  • மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர்
  • மாணவர்கள் மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர்
  • மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும் (96.32 சதவிகிதமும்) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் (90.96 சதவிகிதம்) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • இது கடந்த 2020 ஆம் ஆண்டை காட்டிலும் தேர்சி விகிதம் அதிகம்.
  • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவிகிதம் தனியார் பள்ளிகள் தேர்ச்சி அடைந்துள்ளன.
  • அரசுபள்ளிகள் 89.06 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவு
  • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • அதற்கு அடுத்தபடியாக வேதியல் பாடத்தில் 97.98 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • கணிதத்தில் 94.29 சதவிகிதம்
  • இயற்பியலில் 96.4 சதவிகிதம்
  • உயிரியல் பாடத்தில் 98.89 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100க்கு 100 பெற்ற விபரம் - பாடவாரியாக

  • அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்கள்
  • கணக்குப்பதிவியல் 4,540 மாணவர்கள்
  • கணிதத்தில் 1,858 மாணவர்கள்
  • வேதியலில் 1,500 மாணவர்கள்
  • கணினி அறிவியலில் 3,827 மாணவர்கள்
  • இயற்பியலில் 634 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
  • 12 ஆம் வகுப்பு வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்
  • பெரம்பலூர் 97.95%
  • விருதுநகர் 97.27%
  • ராமநாதபுரம்: 97.02%

10 வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரவித்யாலாயா பள்ளியில் பயிலும் மாணவர் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் ஒரு மாணவர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி..

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு ஆன்லைன் பதிவு தொடக்கம்: விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details