தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகளாக உள்ளனர் - டிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கைப்பேச்சு!

12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகள் போன்ற பல்வேறு உயர் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர் எனவும், மாணவர்கள் மனம் தளரக்கூடாது எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேசியுள்ளார்.

12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகளாக உள்ளனர் - சைலேந்திரபாபு வீடியோ வெளியீடு!
12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகளாக உள்ளனர் - சைலேந்திரபாபு வீடியோ வெளியீடு!

By

Published : Jun 20, 2022, 3:28 PM IST

சென்னை:இன்று (ஜூன் 20) 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

மேலும் பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் நீதிபதியாகவும், ஐபிஎஸ், ஐஏஎஸ் அலுவலர்களாகவும் ஆகியிருக்கின்றனர். கடந்த முறை பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அப்படிப்பட்ட மன நிலையில் உள்ள மாணவர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகி, கவுன்சிலிங் பெற்றுக்கொள்ளவேண்டும். பின்னடைவு குறித்து மாணவர்கள் கவலைப்படாமல் அடுத்த இலக்கை நோக்கிச்செல்ல வேண்டும். காவல் துறை அதற்குப் பக்கபலமாக இருக்கும்' எனக் கூறியுள்ளார்.

சைலேந்திரபாபு வீடியோ வெளியீடு

இதையும் படிங்க:10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details