தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ரூ.24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 500 அவசர கால ஊர்திகள் சேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 90 அவசரகால ஊர்தியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.