தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1063 பேருக்கு கரோனா பாதிப்பு - கோவிட் 19

தமிழ்நாட்டில் மேலும் 1063 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1063 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 1063 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Jun 23, 2022, 10:52 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் உட்பட 1063 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனை செய்யப்படுபவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஜூன் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,

'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 22,757 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்து 61 நபர்கள் என 1063 நபர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 57 லட்சத்து 88 ஆயிரத்து 717 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 64 ஆயிரத்து 131 பேருக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5,174 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் இருந்து குணமடைந்த 567 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்து 931 என உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் புதிதாக 497 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 190 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 50 நபர்களுக்கும் கன்னியாகுமரியில் 49 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 63 நபர்களுக்கும் என 35 மாவட்டங்களில் 1063 நபர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 2472 நபர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 948 நபர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 264 நபர்களும் , திருவள்ளூர் மாவட்டத்தில் 273 நபர்களும் என 5174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளில் 113 நோயாளிகளும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையில் 153 நோயாளிகளும் தீவிர சிகிச்சை எனப்படும் ஐசியு படுக்கையில் 18 நோயாளிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்!

ABOUT THE AUTHOR

...view details