சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்.28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 405 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,061 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரத்து 254 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 லட்சத்து 99 ஆயிரத்து 554 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 12,051 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,286 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 51 ஆயிரத்து 431 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகள் என 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 72 என உயர்ந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.