தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 104 விமானங்கள் ரத்து! - chennai flight cancelled

உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று (மே 10) 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையத்தில் 104 விமானங்கள் ரத்து!
சென்னை விமானநிலையத்தில் 104 விமானங்கள் ரத்து!

By

Published : May 10, 2021, 2:32 PM IST

சென்னை:கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரம் வரை இருந்தது. தற்போது, கரோனா காரணமாக பயணிகளின் வருகை பல மடங்கு குறைந்துவிட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று (மே 10) 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில் 50 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவை, 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள்.

பயணிகள் இல்லாததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரே விமானம் மட்டுமே சென்றது. சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூா் சென்று அல்லது ஹைதராபாத் சென்று டெல்லி செல்கிறது. அதைப்போல் சென்னையிலிருந்து புறப்பட்டு கொச்சி வழியாக மும்பை செல்கிறது.

இதையும் படிங்க: மதுரைச் சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details