தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட் நாளை மதியம் முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15. 6.2020 முதல் 25.6.2020 வரையும், 26.3.2020 அன்று நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு தேர்வு 16.6.2020 அன்றும், 24.3.2020 அன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.6.2020 அன்றும் நடைபெறவுள்ளன.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் - அரசுத் தேர்வுத்துறை
சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 4.6.2020 (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் 4.6.2020 மதியம் முதல் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்புகொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து தாங்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்" என அதில் கூறியுள்ளார்.