தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்! - chennai latest news

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ள நிலையில், அதற்காக பல்வேறு அளவுகோள்கள் உள்ளன.

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்
குடும்ப தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்

By

Published : Oct 10, 2021, 11:11 AM IST

Updated : Oct 13, 2021, 7:52 PM IST

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது.

இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது மிகவும் முக்கிய திட்டம்.இந்த நிதி உதவித்தொகை, பணக்காரர்களுக்கும், மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று விமர்சனங்களும், வழக்குகளும் எழுந்துள்ளன. அதனால் இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறி அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது எனத் தெரிவித்தார்.

இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்க பல்வேறு அளவுகோல்கள் இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து, குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என்றும், குடும்ப தலைவராக ஆண் இருந்தால் தொகை வழங்கப்படமாட்டாது என்று பரவிய தவறான தகவல்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, பலர் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கான, ரூ.1,000 உதவித் தொகை திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில், ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளை கொண்ட அட்டைகளுக்கு வழங்கப்படமாட்டாது என்றும், குடும்பத் தலைவராக யார் இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

5 வகையான குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள்

  • PHH : அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
  • PHH-AAY: 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
  • NPHH: அரிசி உள்பட அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
  • NPHH-S: அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
  • NPHH-NC: எந்தப் பொருள்களும் தரப்படமாட்டாது. குடும்ப அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும், முகவரி சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தையும் மக்கள் அதிகளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சாமி சிலை அவமதிப்பு - 10 இளைஞர்கள் கைது

Last Updated : Oct 13, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details