சென்னை:பகபதிபாலா நடித்து இயக்கியுள்ள ஆதிக்க வர்க்கம் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு தமிழ்த் திரைப்படத்துறை முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது.
திரையரங்கு இருக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்; அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்நாடு அரசு சினிமாத்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. முழுவதுமாக தளர்வு அளிக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும்.
மேலும் திரைத்துறைக்கும் அதிமுகவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே திருப்பித் தரும் அரசு அதிமுக அரசு. இதைத் தவறாக சித்தரிப்பவர்கள் தமிழின விரோதிகளாக இருப்பார்கள். பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் கோரிக்கைகளைத் தான் அரசு அங்கீகரிக்கும்" என்றார்.
இதையும் படிங்க:ஆண்டிப்பட்டியின் அழகில் மயங்கிய பியூஷ் கோயல்!