தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலி பறிப்பு! - செயின் பறிப்பு

தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத இருவர் பறித்துச் சென்றனர்.

10-sovereign-gold-chain-snatched-near-mudichur
டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!

By

Published : Aug 10, 2021, 5:41 PM IST

சென்னை:சென்னை குன்றத்தூர் அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ஹேமலதா(38). இவர், தனது கணவர் முகுந்தனுடன் (51) முடிச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வண்டலூர் பூந்தமல்லி வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முடிச்சூர் அருகே இருசக்கர வாகனத்தில் இவர்களைத் பின்தொடர்ந்து வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் ஹேமலதா அணிந்திருந்த 10 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முகுந்தனுக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நகை திருடிய பெண்கள்: சிசிடிவி உதவியுடன் பிடித்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details