தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் கைது - சென்னையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனைசெய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

kanja
kanja

By

Published : Sep 25, 2020, 2:35 PM IST

அம்பத்தூரை அடுத்த பாடி, பஜனை கோவில் தெருவில் ஒரு வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொரட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, காவல் துறையினர் சந்தேகத்தின்பேரில் அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு நெகிழிப் பையில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் அங்கிருந்த 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.

மேலும், இதனை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரான மகேஷ்குமார் (24) என்பவரை கைதுசெய்தனர். மேலும், காவல் துறையினர் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்களையும் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details