தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2022, 10:46 PM IST

ETV Bharat / state

குடியரசு தின விழா: தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: குடியரசு தினத்தையொட்டி அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் சுமார் 1 லட்சம் காவல் துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சென்னையை பொருத்தவரை 6 ஆயிரத்தை 800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 5 அடுக்கு காவல் துறையினர் உட்பட 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் முக்கிய இடங்களான விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ரயில் நிலையங்களில் அசாம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், தாம்பரம்,காட்பாடி, அரக்கோண்ம், திண்டிவனம், திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 2 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில்வே கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை மூலமாக ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க:Omicron BA-2 உருமாறிய வைரஸ்: இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details