சென்னை:துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது (27) என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, கிச்சன் செட் ஸ்டாண்ட் குழாயில் தங்கத்தை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.