சென்னை:காவேரி கூக்குரல் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில், தரமான டிம்பர் மரக்கன்றுகள் ரூ.3-க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பயணங்கள் மூலமாக விவசாய நிலங்களில் மரம் வளர்ப்போம். ஏற்கனவே இருக்கும் 30 நர்சரிகளுடன் சேர்ந்து கூடுதலாக 12 புதிய நர்சரிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.