செங்கல்பட்டு:பாரதபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த சிலைக்கு பாதுகாப்பிற்கு இருந்த ராஜேஷ் கண்ணா என்பவர் நேற்று (ஆக.31) இரவு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தன. செங்கல்பட்டு அடுத்த பாரதபுரம் பகுதியிலும், சமுதாயக் கூடத்தில் விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா (27) மற்றும் அவரது நண்பர்கள் இரவு காவலுக்கு இருந்தனர்.
அப்பொழுது அந்த பகுதிக்கு திடீரென வந்த நபர்கள் சிலர் ராஜேஷ் கண்ணாவை சாரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். விநாயகர் சிலைக்கு காவல் இருந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.