செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதனை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் ஆணைய விதிமுறை மீறல்; சீமான் மீது வழக்குப்பதிவு! - தேர்தல் ஆணைய விதிமுறைகள் மீறல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய பிரச்சாரத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக சீமான் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அப்போது, இரவு 9 மணிக்கு பேச அனுமதி பெற்றுவிட்டு, இரவு 10.11 மணிக்கு பரப்புரையை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக செங்கல்பட்டு நகர காவலர்கள் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க :ஆனை கட்டிப் போரடிக்கும் சங்க காலக் காட்சியை மீண்டும் உயிர்ப்பித்த மதுரை மைந்தர்: வைரல் வீடியோ