செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் தனியார் பேருந்து மூலம் கல்பாக்கத்தில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் காத்தாங்கடை அருகே பேருந்து சென்றபோது, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசுப் பேருந்துடன் மோதியது. தனியார் பேருந்தில் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற மூன்று பெண்கள், உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நிச்சயதார்த்தத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் சென்ற பேருந்து விபத்து; 4 பேர் உயிரிழந்த துயரம்! - Madurantakam
கிழக்கு கடற்கரை சாலையில் நிச்சயதார்த்தத்திற்கு சென்ற தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
two-bus-accident-in-chengalpattu-4-members-death
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கூவத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.