செங்கல்பட்டு:ஈச்சங்கரணை கிராமம், டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாலு (45). இவர் அஞ்சூர் பகுதியில் உள்ள மின் பராமரிப்பு நிலையத்தில் 14 ஆண்டுகளாக வயர்மேனாக பணிபுரிந்துவந்தார்.
இவர் பட்டரவாக்கம் பகுதியில் இன்று (ஜூன் 9) மின்துண்டிப்பை சரி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!