தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் தண்ணீர் சூழ்ந்த கிராமம்! - Rain fall in Chengalpattu

செங்கல்பட்டு: திருப்போரூர் தாலுகாவில், தொடர் மழையால் கிராமமே தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது.

Rain fall in Chengalpattu
திருப்போரூர்

By

Published : Dec 4, 2020, 1:14 PM IST

நிவர், புரெவி எனத் தொடர்ந்து உருவாகிவந்த புயலால், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தொடர் மழையால் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிவருகின்றன. அந்த வகையில், திருப்போரூர் தாலுகா, மானாம்பதி ஊராட்சிக்குள்பட்ட ஆனந்தபுரம் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சாலையிலும், தெருக்களிலும் கரைபுரண்டோடும் தண்ணீர், வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் கிராமமே தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. சாலையில் மின்கம்பம் சாய்ந்து கிடப்பது அப்பகுதிவாசிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, கிராமத்தின் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் மழையால் இடிந்து விழுந்த வீடு!

ABOUT THE AUTHOR

...view details