வண்டலூர் அருகில் நடக்கும் 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கிச்சுடும்போட்டி செங்கல்பட்டு: வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில், 23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை தமிழ்நாடு காவல்துறை நடத்துகிறது.
கடந்த 9ஆம் தேதி தொடங்கி வரும் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் துவக்கவிழா வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 296 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் 1994,2012 ஆகிய ஆண்டுகளில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களையும், வெற்றி பெறும் அணிகளுக்கு கேடயங்களையும், வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; 20 பேருக்கு சம்மன் - விசாரணை தீவிரம்