திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை, தடுப்பூசிப் போடும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் விரைவில் மகப்பேறு சேவை மையம் செயல்படும்.
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை முதல் செயல்படும். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 53 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 75 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.