செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து மக்களும் அப்பகுதியில் உள்ள பகவதி அடகுக் கடையில் நகை வைத்து பணம் பெறுவது, நகை மீட்பது என அனைத்து வர்த்தகமும் செய்து வந்தனர்.
இந்த நகைக் கடையை நடத்தி வந்தவர் மோதிலால். இவர் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 800க்கும் மேற்பட்டோரிடம் மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தீபாவளி சீட்டு பணம் வசூல் செய்து வந்துள்ளார். திடீரென கடந்த நவம்பர் மாதம் முதல் மோதிலால் வெளி மாநிலத்திற்குச் சென்று தலைமறைவானார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். அணைக்கட்டு காவல் துறை புகாரைப் பெற்றுக்கொண்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்