தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அணுகுண்டு மேலே அமர்வதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றே’ - சீமான் பேச்சு - செங்கல்பட்டு அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு : திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், “அணுகுண்டு மேலே அமர்வதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றே” எனக் கூறினார்.

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து  சீமான் பேச்சு
திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பேச்சு

By

Published : Mar 25, 2021, 12:12 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனசுந்தரியை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

“கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளிவரும் கசிவை சுத்தம் செய்ய முடியாது எனத் தெரிந்தும் தொடர்ந்து அதனை செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அணு உலையை சுற்றியுள்ள 14 கிராமங்களில் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு நடைபெற்றால்தான் குடியிருப்புகள் கட்டி வாழ முடியும். பத்திரப்பதிவு தடை என்றால் நிலங்களை வாங்க, விற்க முடியாது. அந்த இடத்தில் மக்கள் வாழ்கை எப்படி பாதுகாப்பானதாக இருக்கும்? அணுகுண்டு மேலே அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடி இருப்பதும் ஒன்றுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

காற்றாலை அமைப்பதே மின்சாரம் தயாரிப்பதற்கு பாதுகாப்பானது. காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, சூரிய ஒளியிலிருந்து தகடுகளைப் பொருத்தி மின்சாரம் தயாரிப்பது போன்றவற்றை செய்யலாம். ஆனால், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து வாங்குவதற்கு மட்டுமே 19 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். ஏன் உற்பத்தியை நோக்கி செயல்படுவதில்லை? உற்பத்தி செய்தால் கமிஷன் கிடைக்காது என்பதால், வாங்குவதற்கு மட்டுமே முதலீடு செய்கின்றனர்.

எந்த மாநில முதலமைச்சருக்கு சாராய ஆலை உள்ளது? ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சாராய ஆலை உள்ளது. எனவே, நீங்கள் முதலமைச்சரை தேர்வு செய்யவில்லை. சாராய ஆலை அதிபர்களையே தேர்வு செய்கிறீர்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பத்து ஆண்டு பசுமைத் திட்டம் தொடங்கி இதுவரை பல்லாயிரம் பனை விதைகளை நட்டு பாதுகாத்து வருகிறோம். அதிகப்படியான குருதிக்கொடையும் நம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி தொடங்கி அதனை செயல்படுத்தி வருகிறார். எனவே இத்தகைய அரசுகளை புறந்தள்ளி நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்” என்றார்.

இதையும் படிங்க:கழுத்தில் ருத்ராட்சம், கையில் சிலுவை, தலையில் குல்லா.. சுயேச்சை வேட்பாளரின் பரப்புரை பாணி

ABOUT THE AUTHOR

...view details