செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடமிருந்து விவரங்களைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து விவரம் கொடுத்தவர்களின் வங்கிக் கணக்கில் தலா 40 ஆயிரம் ரூபாய், சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தபெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, நிதி நிறுவனஅலுவலர்களுக்குத் தெரியாமல்சதீஷ் குமார், அந்தப்பெண்களிடம் , “வேறு ஒருவரின் லோன் உங்களுக்குத் தவறாக வந்துவிட்டது. உங்களது லோன் விரைவில் வரும்” எனக் கூறி, ஏமாற்றி, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்திற்கும் மேல் பெற்றுக்கொண்டு, தப்பிச் சென்றுவிட்டார்.