தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடியின் ஆட்சியில் தெய்வங்கள் நன்றாக இருக்கும் இடம் தமிழ்நாடு - சு.வெங்கடேசன் எம்.பி. - கல்வி உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு 'திவ்யாங்' அதாவது, தெய்வத்தின் குழந்தை எனப் பெயர் சூட்டியதோடு நிற்காமல், அவர்களை முன்னேற்றும் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 20, 2022, 9:12 PM IST

செங்கல்பட்டு:மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டினை தொடங்கி இன்று (செப்.20) தொடங்கி வைத்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், இந்த ஆண்டு 2022-23 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டினை மோடி அரசு 35%ஆக குறைத்துள்ளதாகக் கூறினார்.

ஜிஎஸ்டியில் ஏற்றமா? அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்கும் ஒன்றிய அரசு நிறுவனமான அலிம்கோவுக்கு ரூ.10 கோடியும், கல்வி உதவித்தொகையினை ரூ.5 கோடியும் குறைத்துள்ளது மோடி அரசு. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதித்து அழகு பார்க்கிறது மோடி அரசு. தெய்வக்குழந்தைகளுக்கு அதிகமான வஞ்சகத்தையையும் அநீதியையும் நிகழ்த்தியுள்ளது ஒன்றிய அரசு.

உண்மையான தெய்வம் கார்ப்பரேட்டுகளா? கடந்த ஆண்டு கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை ரூ.5 லட்சத்து 50‌ ஆயிரம் கோடி. ஆனால், தெய்வத்தின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, வெறும் ரூ.1044 கோடி. உண்மையில் அவர்களுக்கு தெய்வம் அதானியும் அம்பானியும் தான்.

இந்த பட்ஜெட்டில் மாற்றுத்திறன் கொண்ட மனிதர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது ரூ.838 கோடி. ஆனால், மாற்றுத்திறனாளிகளை 'திவ்யாங்' அதாவது தெய்வக்குழந்தைகள் எனக்கூறும் பிரதரம் மோடி மற்றும் அவர் தலைமையிலான ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது வெறும் ரூ.1044 கோடி. மோடியின் ஆட்சியில் தெய்வங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளப்படுவதும் பராமரிக்கப்படுவதும் தமிழ்நாட்டில் தான்.

செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு

தெய்வக்குழந்தை என்று முலாம் பூசும் வேலையை விட்டுவிட்டு மாற்றுத்திறனாளிகளை முன்னேற்றும் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏம்மா நீ எஸ்சி தானே? விவாதத்திற்குள்ளாகும் உயர்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு..

ABOUT THE AUTHOR

...view details