செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சுற்றுலாத் தலமாகும். தமிழ் மன்னர்களின் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தச் சுற்றுலாத் தலம், பிரதமர் மோடி, சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. இதனால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்வது வாடிக்கையாக இருந்துவந்தது.
கரோன பாதிப்பால், கடந்த ஒன்பது மாதங்களாகப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் இன்றுமுதல் அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, இன்று (டிச. 14) பார்வையாளர்கள் வருகை தொடங்கியுள்ளது.