தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளை - திருட்டு கும்பல் கைது

கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் செல்போன் கடைக்குள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளை
கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளை

By

Published : Aug 20, 2021, 9:36 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் போலோராம். கேளம்பாக்கம்-கோவளம் செல்லும் சாலையில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 8ஆம் தேதி இரவு செல்போன் வாங்குவதுபோல் அடையாளம் தெரியாத நான்கு பேர் கடைக்குள் நுழைந்தனர்.

கத்தி முனையில் கொள்ளை

பின்னர், போலோராமை கத்தியை காட்டி மிரட்டி, கடையிலிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக, கடை உரிமையாளர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

நான்கு பேர் கைது

விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த ஜெகதீஷ் (22), விக்னேஷ் (24), அஜித்குமார் (23), ஜெயபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று (ஆக 19) அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 'எலி' பட வடிவேல் பாணியில் இங்கிலாந்தில் கொள்ளை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details